ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்


ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வன்கொடுமை செய்த பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும், மல்யுத்த வாரிய தலைவருமான பிரிஜ்பூஷன் சரன்சிங்கை கைது செய்து, பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு நியாயம் வழங்கக் கோரி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் ராமேசுவரம் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முருகானந்தம், மாரிமுத்து, ஆரோக்கிய நாதன், ரவிச்சந்திரன், நந்தகிருஷ்ணன், மீனவர் சங்க மாநில தலைவர் முருகானந்தம், கணேசமூர்த்தி, தேவசகாயம், ஆர்.சகாயம், குளோரியான், நாகராஜ், பீட்டர் கிருபாகரன், ஜெயராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story