ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


விருதுநகர் மின் பகிர்மான வட்ட தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயிஸ் பெடரேஷன் ஆகிய தொழிற்சங்கத்தினர் இணைந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு எம்ப்ளாயிஸ் பெடரேஷன் மாநில இணை செயலாளர் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை தலைவர் திட்ட செயலாளர் சந்திரன் மற்றும் நிர்வாகிகள் சவுந்தர பாண்டியன், பெடரேஷன் மாநில உப தலைவர் திட்டச் செயலாளர் ஞானகுரு இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 16-ந் தேதி ஏற்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் 1.12.2019-க்கு பின் பணியேற்ற 9500 கேங்மேன் பணியாளர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்காததை கண்டித்தும், 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவாதம் தரப்படாததை கண்டித்தும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினமும் ரூ.480 ஊதியம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலிக்காததை கண்டித்தும், துப்புரவு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன.


Next Story