ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

விடுதலை களம் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர்


அருப்புக்கோட்டை அருகே உள்ள தொப்பலாக்கரை கிராமத்தில் வசிக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் அங்குள்ள அம்மன் கோவிலுக்கு வழிபட செல்லும் பாதையை வேலி போட்டு தடை செய்துள்ள நிலையில் இந்த வேலியை அகற்ற வலியுறுத்தியும், கோவில் நிலத்தை தனியாருக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்ய கோரியும், கோவில் பெயருக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும் விடுதலை களம் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை களம் கட்சியின் நிறுவன தலைவர் நாகராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 80 பெண்கள் உள்பட 200 பேர் கலந்து கொண்டனர்.


Next Story