பாலியல் புகாருக்கு உள்ளான பா.ஜனதா எம்.பி.யை கைது செய்ய கோரி வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பாலியல் புகாருக்கு உள்ளான பா.ஜனதா எம்.பி.யை கைது செய்ய கோரி வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

பாலியல் புகாருக்கு உள்ளான பா.ஜனதா எம்.பி.யை கைது செய்ய வலியுறுத்தி தர்மபுரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி:

ஆர்ப்பாட்டம்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் பா.ஜனதா எம்.பியாக உள்ளார். இவர் மீது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்தனர்.

இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கைது செய்ய வேண்டும்

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அருள்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சிலம்பரசன், குப்பன், மணிகண்டன், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மல்லிகா, மாவட்ட தலைவர் ஜெயா, நிர்வாகிகள் பூபதி, தனலட்சுமி, நிர்மலா ராணி, தமிழ்மணி, மீனாட்சி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு மதிப்பளித்து புகாருக்கு உள்ளான பா.ஜனதா எம்.பி. மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்து சட்ட விதிகளின்படி விசாரணை நடத்த வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.


Next Story