ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர்
தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளையினர் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் ஜேசு டெல்குபின் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் சரோஜினி கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர் போத்திராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தொகுப்பூதியம் பெறும் செவிலியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். கருவூலம் மூலம் ஊதியம் பெறும் செவிலியர்களுக்கு உயர்த்தப்பட்ட ரூ. 18 ஆயிரம் மாத ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் மாதம் முதல் நாளே ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story