ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணிகள் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், ஒப்பந்த பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வாங்கிட வலியுறுத்தியும், சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயபாண்டி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர் செயலாளர் முருகன் பேசினார். முடிவில் சி.ஐ.டி.யு. மாவட்ட இணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். இதில் பாண்டி, பழனி, பாலமுருகன் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.


Next Story