ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகர தலைவர் பொன்பாண்டி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட சி.ஐ.டி.யு. இணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கருப்பசாமி, ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட நீராதாரங்களை முறையாக பராமரிக்க வேண்டும். தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நகர் பகுதியில் அனைத்து பகுதிகளிலும் முறையாக அமல்படுத்த வேண்டும். பொது சுகாதார பணியை தனியார் மயமாக்கும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நகராட்சியில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும். அனைத்து சாலைகள் மற்றும் தெரு விளக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன.


Next Story