பா.ஜனதா கண்டன ஆர்ப்பாட்டம்
மார்த்தாண்டத்தில் பா.ஜனதா கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி
குழித்துறை,
பா.ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் உமேஷ் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை கண்டிப்பதாகவும் கூறி மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு நேற்று மாலை கிள்ளியூர் வடக்கு ஒன்றிய பா.ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றிய தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில செயலாளர் சஜீவ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயசீலன் மாவட்ட செயலாளர் சுதர்சிங், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் அருண்குமார், நகராட்சி கவுன்சிலர் ரெத்தினமணி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
Related Tags :
Next Story