ராமநாதபுரத்தில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்
சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை பழிவாங்கும் நோக்கில், அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையை கண்டித்தும், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் அடக்குமுறையை கண்டித்தும் ராமநாதபுரம் அரண்மனை முன்பாக மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் சாயல்குடி வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்லத்துரை அப்துல்லா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் பாபு, மாநிலச் செயலாளர் ஆனந்தகுமார், மாநில அமைப்புசாரா அணி செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட பொருளாளர் கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் கோபால், ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, கவுன்சிலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோஷம்
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதி, ஆர்ட் கணேசன், சிறுபான்மை பிரிவு நிர்வாகி வாணி செய்யது இப்ராஹிம், இலக்கிய பிரிவு முருகேசன், மனித உரிமை பிரிவு செய்யது அபுதாஹிர், நகர் தலைவர்கள் பரமக்குடி கபீர், கீழக்கரை அஜ்மல், வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், மாவட்ட நிர்வாகிகள் ரங்கநாதன், காமராஜ், நிஜாம் அலிகான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசார் மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.