இரட்டைமடி, சுருக்குமடி வலைகளால் மீன் பிடிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்


இரட்டைமடி, சுருக்குமடி வலைகளால் மீன் பிடிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

ராமேசுவரம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி வலைகளை வைத்து மீன் பிடிப்பது தடை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்

ராமேசுவரம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி வலைகளை வைத்து மீன் பிடிப்பது தடை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இரட்டை மடி வலைகள்

ராமேசுவரம், பாம்பன் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி வலைகளை வைத்து சட்ட விரோதமாக மீன்பிடிக்க முயற்சி செய்யும் மீனவர்களையும், படகுகளையும் மீன் துறையினர் அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோல வலைகளை வைத்து மீன் பிடிப்பதால் மீன்கள் மட்டுமின்றி மீன் குஞ்சுகள் பவளப்பாறைகள் மற்றும் அரிய கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் அழியும் நிலை ஏற்படுகிறது.

ஆகவே மீன் துறையினர் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். ராமேசுவரத்தில் சுமார் 500 படகுகளுக்கு மட்டுமே மீன்வளத்துறை அனுமதி இருந்தும் கூடுதலாக ஆயிரம் படகுகளுக்கு மேல் எந்தவித அனுமதியும் பெறாமல் மீன் பிடித்து வருகிறார்கள். மேலும் படகுகளுக்கு அனுமதிக்கப்பட்ட என்ஜின்களை விட அதிக குதிரை திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்தி வருகின்றனர். உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்தாவிடில் முழுமையாக இந்த பகுதி கடல் வளம் சீரழிந்து பல இயற்கை பேரழிவுகளை உருவாக்கும்.

ஆர்ப்பாட்டம்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் சங்குமாள் பகுதியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கவுன்சிலர் பிரபாகர் தலைமை தாங்கினார். மீனவ சங்க தலைவர் போஸ், வழக்கறிஞர்கள் சரவணன், பிரேம்குமார், திருமுருகன், இந்து கோவில் பராமரிப்பு கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் பழனிவேல் ராஜன், சுரேஷ்குமார், மாரிமுத்து, சந்தான ஸ்டீபன், அய்யம்பெருமாள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் மேற்கண்ட கோரிக்கை அடங்கிய மனுவை மீன் துறை உதவி இயக்குனரிடம் கொடுத்தனர்.


Next Story