வனத்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்


வனத்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்திய வனத்துறையினரை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைெபற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்திய வனத்துறையினரை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைெபற்றது.

சகோதரர்கள் மீது தாக்குதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர்கள் ராமர், லட்சுமணன். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர்.

செண்பகத்தோப்பு மலைப்பகுதியின் அடிவாரத்தில் உள்ள வயலுக்கு வேலைக்கு சென்ற போது வனத்துறை அதிகாரிகள் 3 பேர், ராமர், லட்சுமணனை தாக்கியதாக அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் தாக்கியதால் காயம் ஏற்பட்டதாக கூறி அவர்கள் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ேசர்ந்தனர்.

ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் திருமலை, ஒன்றிய செயலாளர் சசிகுமார், நகர செயலாளர் ஜெயக்குமார் உள்பட விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்திய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வனத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.


Next Story