வன விலங்குகளை கட்டுப்படுத்தாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்


வன விலங்குகளை கட்டுப்படுத்தாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்தாததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

ஆர்ப்பாட்டம்

அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் காப்பு காடுகளில் உள்ள வனவிலங்குகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி ஏற்படுத்தி வருகின்றன. இதை கட்டுப்படுத்த வேண்டுமென விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டத்திலும், மாவட்ட கலெக்டரிடமும் விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர். ஆனால் பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்துவதற்கான எந்தவித முயற்சியும் வனத்துறையினர் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து வேலூர் மாவட்ட விவசாயிகள்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒடுகத்தூர் வனத்துறை அலுவலக முன் நேற்று மாலை நடந்தது. மாநில துணைத் தலைவர் என்.அரி மூர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.உதயகுமார், மாநில அமைப்பாளர் ராமதாஸ், மாநில இளைஞரணி தலைவர் ஆர்.சுபாஷ், போராட்டக் குழு தலைவர் ரகுபதி, வேலூர் மாவட்ட தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கட்டுப்படுத்த வேண்டும்

சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் வேணுகோபால் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகள், யானை உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளையும் பிடித்து சரணாலயத்தில் விடவேண்டி அனைத்து விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை வைத்தோம். ஆனால் இன்று வரையில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. உடனடியாக பயிர்களை பாதுகாக்க வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

இதனையடுத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது அப்போது பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்தாத வனத்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து விவசாய சங்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் ஒடுகத்தூரில் நடந்தது.


Next Story