தனியார் எஸ்டேட் நிர்வாகங்களை கண்டித்து வால்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம்


தனியார் எஸ்டேட் நிர்வாகங்களை கண்டித்து வால்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தனியார் எஸ்டேட் நிர்வாகங்களை கண்டித்து வால்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் தமிழ்நாடு தேயிலைத் தோட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வால்பாறையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளா்களுக்கு ஊதியத்தில் பஞ்சப்படி உயா்வு வழங்காமலும், கொரோனா தொற்று கால சம்பள நிலுவைத் தொகை வழங்காமலும், தொழிலாளர்களின் சம்பளத்தில் தொழில்வரி பிடித்தம் செய்வதற்கான முயற்சியும் செய்து வருகின்றன. இந்த நடவடிக்கையை கண்டித்து வருகின்ற 17 ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வால்பாறை அமீது தலைமையில் பழைய பஸ்நிலையம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் கருப்பையா, வீரமணி, தங்கவேல், வா்க்கீஸ், ஷாஜீ, சவுந்தரபாண்டியன், வினோத்குமார் ,கேசவமருகன், அண்ணாதுரை, சரவணபாண்டியன், வேல்முருகன், செல்வக்குமார், ராமச்சந்திரன், பாஸ்கரன், ஜீவா, பாலகிருஷ்ணன், செந்தில்முருகன், அருணகிரிபாண்டியன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனா். முடிவில் கூட்டமைப்பு பொருளாளர் மோகன் நன்றி கூறினார்.


Next Story