ராகுல்காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் ராகுல்காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும் ராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரத்தில் அரண்மனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை தலைவர் நவாஸ்கனி எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வருசை முகமது வரவேற்றார். மாவட்ட தி.மு.க.செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., திருவாடானை கருமாணிக்கம் எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், காங்கிரஸ் நிர்வாகிகள் ரமேஷ்பாபு, ராஜாராம்பாண்டியன் கோபால், திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிநாததுரை, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பெருமாள், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பேட்ரிக், ம.ம.க. மாவட்ட செயலாளர் அப்துல்ரகீம், வி.சி.க. மண்டல செயலாளர் முகமது யாசின், தமிழ் புலிகள் ரஞ்சித், ஆதிதமிழர் பேரவை புவனேஷ், பெரியார் பேரவை நாகேசுவரன் உள்பட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் முகமது பைசல் நன்றி கூறினார்.