மாணவிகள் மீதான பாலியல் அத்துமீறல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மாணவிகள் மீதான பாலியல் அத்துமீறல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நாகமலைபுதுக்கோட்டை,
நாகமலைபுதுக்கோட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் நடந்த மாணவிகள் மீதான அத்துமீறல்களை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசையும், உயர்கல்வி துறையையும், பல்கலை நிர்வாகத்தை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாதர் சங்க மாநில செயலாளர் பொன்னுத்தாய் தலைமை தாங்கினார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்க மாநில துணை தலைவர் மல்லிகா, புறநகர் மாவட்ட செயலாளர் பிரேமலதா, மாவட்ட தலைவர் மலர்விழி, மாநகர் மாவட்ட செயலாளர் ஜென்னியம்மாள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தமிழரசன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிருந்தா உள்பட பலர் பேசினர். முன்னாள் எம்.எல்.ஏ. கே.பாலபாரதி நிறைவுரையாற்றினார். முடிவில் லதா நன்றி கூறினார்.