மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு மக்கள் அதிகாரம் அமைப்பினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் 70 பேர் கைது


மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு    மக்கள் அதிகாரம் அமைப்பினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்    70 பேர் கைது
x

மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கோரியும், பள்ளி நிர்வாகத்தின் குற்றங்களுக்கு எதிராக போராடியவர்களை விடுதலை செய்யக்கோரியும், கல்வியில் தனியார்மயத்தை ஒழிக்கக்கோரியும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் விழுப்பும் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஏழுமலை தலைமை தாங்கினார். காளியப்பன் கண்டன உரையாற்றினார். இதில் மாநில துணை செயலாளர் செழியன், தலைமைக்குழு உறுப்பினர் மோகன் உள்பட பலர் கலந்துகொண்டு மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் கோஷம் எழுப்பினர். உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story