விளையாட்டு அரங்கத்தில் நடைபயிற்சி செய்வதை தடுக்கும் அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம்


விளையாட்டு அரங்கத்தில் நடைபயிற்சி செய்வதை தடுக்கும் அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

விளையாட்டு அரங்கத்தில் நடைபயிற்சி செய்வதை தடுக்கும் அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஏ.ஐ.டி.யூ.சி. தெரு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகூர்கனி தலைமை தாங்கினார். குளத்தியப்பன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் சுற்றிலும் நடைப்பயிற்சி பாதை அமைத்து நூற்றுக்கணக்கான மரங்களை வளர்த்து சோலைவனமாக ஆக்கி பராமரித்து வந்த நிலையில், நடைபயிற்சி செய்வதை தடுத்து கதவை அடைக்கும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.


Next Story