குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்


குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Sept 2023 2:30 AM IST (Updated: 1 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவை

நாடு முழுவதும் நடைபெறும் பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கண்டித்து சி.எஸ்.ஐ. (தென்னிந்திய திருச்சபைகள்) சார்பில் ஒவ்வொரு வியாழக்கிழமையையும் கருப்பு வியாழனாக அனுசரித்து வருகின்றனர். இதில் வியாழன்தோறும் தென்னிந்திய திருச்சபையின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களது எதிர்ப்புகளை பல்வேறு விதமாக பதிவு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக சி.எஸ்.ஐ.யின் சமூக செயல்பாட்டு பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் தலைமை தாங்கினார். இதில் சி.எஸ்.ஐ.யை சேர்ந்த ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் பிரின்ஸ் கால்வின், உபதலைவர் டேவிட் பர்னபாஸ், பொருளாளர் அமிர்தம், மற்றும் பேராயரின் மனைவி ஆனி ரவீந்தர், சி.எஸ்.ஐ. கோவை வட்டதலைவர் ராஜா, சமூக செயல்பாட்டு பிரிவு தலைவர் மனோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story