கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அதிகாரி படுகொலையை கண்டித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே மணல் கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் படுகொலையை கண்டித்து புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர். கொலையான கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி உள்பட நிர்வாகிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story