அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 July 2023 12:30 AM IST (Updated: 21 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

விலைவாசி உயர்வை கண்டித்து வேதாரண்யத்தில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

விலைவாசி உயர்வை கண்டித்து வேதாரண்யத்தில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்தும், அனைத்து துறைகளிலும் நடைபெறும் ஊழலை கண்டிக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் கிரிதரன், சுப்பையன், நகர செயலாளர்கள் நமச்சிவாயம், தங்ககதிரவன் மற்றும் ஒன்றிய, நகர, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு, நாகை, கீழ்வேளூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.


Next Story