அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

காரியாபட்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி பேரூர்அ.தி.மு.க. சார்பில் காரியாபட்டி பஸ் நிலையம் முன்பு விலை வாசி உயர்வு, சொத்துவரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன், மாவட்ட அவைத்தலைவர் பொதுக்குழு உறுப்பினர் பழனி, நகர செயலாளர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் ஒன்றிய செயலாளர்கள் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், திருச்சுழி முத்துராமலிங்கம், முனியாண்டி, மாவட்ட பேரவை செயலாளர் மச்சசேஸ்வரன், மாவட்ட பொருளாளர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story