அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் தி.மு.க., அரசை கண்டித்து பரமன்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹென்றி தாமஸ் தலைமை தாங்கினார். உடன்குடி ஒன்றிய செயலாளர் தாமோதரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத் தலைவர் தாவீது வரவேற்றார். இதில் மாதவன்குறிச்சி ஊராட்சிதலைவர் சேர்மத்துரைஉட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிவகளையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர். முக்காணியில் அ.தி.மு.க. கிளை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து ெகாண்டனர்.


Next Story