அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் திட்டச்சேரி பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்டச்சேரி நகர செயலாளர் அப்துல் பாசித் தலைமை தாங்கினார். கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருட்டிணன், பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைப்பு செயலாளர் ஆசைமணி கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் அபுசாலிஹ், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முயினுதீன், மாவட்ட இளைஞரணி தலைவர் ராம்சந்தர், ஒன்றிய பேரவை செயலாளர் ராஜேஷ்குமார், ஒன்றிய துணை செயலாளர் திருமேனி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மின்சாரம், பால், சொத்து வரி உள்ளிட்டவைகளின் விலைவாசி உயர்வு, நிர்வாக சீர்கேடு போன்றவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story