அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ராமு தலைமையில் சோளிங்கர் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எல்.விஜயன் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சோளிங்கர் முன்னாள் எம்.எல்.ஏ. ஜி சம்பத் கலந்துகொண்டு விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், சோளிங்கர் நகராட்சியில் கழிவுநீர் குளத்திலும், ஏரிகளிலும் விடப்படுகிறது. இதனால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுகிறது. மக்களுக்கு விரோதமான செயல்களை மட்டுமே தி.மு.க. அரசு செய்து வருகிறது. மக்கள் போற்றும் வகையில் எந்த திட்டங்களையும் செய்யவில்லை. சோளிங்கர் தாலுகாவில் மட்டும் 3,600 பேருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வாலாஜா

வாலாஜா பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க சார்பில், மின்கட்டணம், சொத்துவரி, பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் சுகுமார் கலந்துகொண்டு பேசினாா்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பால் விலை, மின்கட்டணம், சொத்துவரி ஆகியவற்றை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதில் ஜெயலலிதா பேரவை பூண்டி பிரகாஷ், மணி, ஆறுமுகம், அம்பேத்ராஜன், முனிசாமி, முரளி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஆற்காடு நகரம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர அ.தி.மு.க. சார்பில் ஆற்காடு நகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் எம்.சங்கர் தலைமை தாங்கினார். நகர அவை தலைவர் புருஷோத்தமன், மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால், மாவட்ட இணைச் செயலாளர் கீதா சுந்தர், துணைச் செயலாளர் ரமா பிரபா, மாவட்ட பிரதிநிதி பிச்சைமுத்து உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை ஆகியவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேல்விஷாரம் நகரம்

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மேல்விஷாரத்தில் உள்ள கத்தியவாடி கூட்ரோட்டில் நடைபெற்றது. நகர செயலாளர்கள் கிழக்கு விஜி, மேற்கு இப்ராஹிம் கலிலுல்லா ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் நகரமன்ற தலைவர் புட்டு அப்துல்ரகுமான், ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் சாரதி, நகரமன்ற உறுப்பினர்கள் ஜமுனா ராணி, லட்சுமி நிர்வாகிகள் மன்சூர் பாஷா, மஸ்தான் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை உள்ளிட்டவை குறித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story