முத்துப்பேட்டையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


முத்துப்பேட்டையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

முத்துப்பேட்டையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தி்ல ஈடுபட்டனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

மின்கட்டணம், பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு நகர அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மங்கள் அன்பழகன் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றியக்குழு தலைவர் கனியமுதா, மாவட்ட துணைச்செயலாளர் அம்பிகாபதி, மாவட்ட மருத்துவர் அணி பொருளாளர் டாக்டர் தாவூது மற்றும் ஏராளமான பெண்கள் உள்பட 100-க்கு மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story