சீர்காழியில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக்கோரி சீர்காழியில் அ.தி்.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
சீர்காழி:
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக்கோரி சீர்காழியில் அ.தி்.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் கடந்த 11-ந்தேதி வரலாறு காணாத அளவிற்கு 43 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சீர்காழி பகுதியில் உள்ள குடியிருப்புகள், விளைநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவிற்குட்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு சார்பில் ரூ.ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கூடுதல் நிவாரணம் வழங்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ். பவுன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் செல்லையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வினோத் வரவேற்றார்.
கலந்துகொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு பேசினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், நற்குணன், ஆதமங்கலம் ரவிச்சந்திரன், சிவக்குமார், மயிலாடுதுறை நகர செயலாளர் செந்தமிழன், பேரூர் கழக செயலாளர் போகர் ரவி, பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட விவசாய அணி செயலாளர் வேட்டங்குடி சீனிவாசன் நன்றி கூறினார்.
ஐகோர்ட்டில் வழக்கு
பின்னர் நிருபர்களிடம் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. கூறுகையில், மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அப்போதைய மழை பாதிப்பிற்கு என்ன நிவாரணம் வழங்க கோரினாரோ? அதனை தற்போது வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.3 ஆயிரம் மற்றும் விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார்.