திருவாரூரில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

திருவாரூரில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து திருவாரூரில் காமராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி திருவாரூர் புதிய ரெயில் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளர்கள் கோபால், சிவா ராஜமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பா சுப்ரமணியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேண்டும். கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவற்றை தடுத்து சட்டம்-ஒழுங்கை சீர் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது

ஆர்ப்பாட்டத்தில் காமராஜ் எம்.எல்.ஏ. பேசுகையில், தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 25 பேர் இறந்துள்ளனர். தஞ்சையில் டாஸ்மாக் கடையில் மதுகுடித்து 2 பேர் இறந்துள்ளனர். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

தி.மு.க. அரசு புதிய திட்டங்களுக்கு நிதி ஏதும் ஒதுக்காமல் அ.தி.மு.க. அரசு ஒதுக்கிய நிதிகளிலேயே திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆட்சியில் கடுமையான விலைவாசி ஏற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அ.தி.மு.க. ஆட்சி வரவேண்டும் என அனைவரும் வேண்டிக்கொள்கிறார்கள் என்றார்.

இதில் மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ரெயில் பாஸ்கர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.


Next Story