விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தேசிய ஊரக வேலை திட்ட வேலை நாட்களை 150 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், தினக்கூலியில் மாநில அரசின் பங்காக ரூ.100 சேர்த்து 381 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், காலை 7 மணிக்கு வேலைத்தளத்திற்கு வர சொல்லி கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும், வேலை அட்டை பெற்று உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் முழுமையான வேலை நாட்களை அளிக்க வேண்டும், ஊரக வேலை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தி வேலைவாய்ப்பை பறிப்பதை கைவிட வேண்டும், தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பொள்ளாச்சி தாலுகா தலைவர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர் துரைசாமி, துணை செயலாளர் மகாலிங்கம், மாவட்ட குழு பட்டீஸ்வரமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story