அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்
நாகை அவுரி திடலில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் லதா தலைமை தாங்கினார். மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் சுகந்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட தலைவர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மணிப்பூரில் தொடரும் பெண்கள் மீதான வன்முறையை கண்டித்தும், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story