அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டம்
கந்துவட்டிக்காரர்கள், நிதி நிறுவனங்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும். பெண்களை அவதூறாக பேசுகின்ற மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நெல்லை மாவட்ட குழு சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் லதா தலைமை தாங்கினார். ஜெயந்தி, சந்திரா, சமாதானம், பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் லட்சுமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வாக்குவாதம்
முன்னதாக கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பொன்னெடில், துணை தலைவர் முத்துமாரி, துணை செயலாளர் அமுதா, மாவட்ட குழு உறுப்பினர் மரகதம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.