அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 12 Jan 2023 6:45 PM GMT)

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

நாகப்பட்டினம்

நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் பேசினார். காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும். 385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகள், மாவட்ட ஆஸ்பத்திரிகளில் கூடுதலாக தலைமை மருந்தாளுநர், மருந்து கிடங்கு அலுவலர் மற்றும் மருந்தாளுர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் செவிலியர் சங்க செயலாளர் ஜீவானந்தம், வட்டார செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story