டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
x

டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் விஜய் ஆனந்த் கடந்த 25-ந் தேதி வங்கில் செலுத்த ரூ.15 லட்சத்தை எடுத்து சென்றார். அப்போது மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து மேட்டுப்பாளையத்தில் கோவை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு சார்பில் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட பொதுச்செயலாளர் ஜான் அந்தோணி ராஜ், மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், பாட்டாளி தொழிற்சங்க மாநில துணைத்தலைவர் ராமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு சட்டம், சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். வங்கிகளே நேரடியாக கடை விற்பனை பணத்தை பெறுவதற்கான ஏற்பாட்டை டாஸ்மாக் நிறுவனம் செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், விற்பனையாளர் சங்க மாநில துணைத்தலைவர் மதியழகன், பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ராமானுஜம், மேட்டுப்பாளையம் பொது தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் எம்.ஆர்.மூர்த்தி நன்றி கூறினார்.


Next Story