ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை சந்திப்பில் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட துணை தலைவர் கலையரசன் ஆகியோர் வரவேற்றனர். இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவா, மணிகண்ட மகாதேவன், வெற்றிவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், ஓலா, ஊபர் ராபிடோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டியும், போக்குவரத்து அபராதங்களை குறைக்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் நம்பிராஜன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story