பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டத்தில் பா.ஜ.க.வின்ர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டத்தில் பா.ஜ.க.வின்ர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
சென்னையில் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் கண்மணி, கவிதா சுரேஷ், ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர். வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் முருகன், தலைவர் எம்.வினோஷ் குமார், பேரூராட்சி கவுன்சிலர் குருசேவ், மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் வினோத்குமார், மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் திருப்பத்தூர் புதிய பஸ் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சி.வாசுதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் அன்பழகன், நகரத் தலைவர் பி.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தானர். ஆர்ப்பாட்டத்தை மாநில செயலாளர் கோ.வெங்கடேசன் தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் ஈஸ்வர், பார்த்திபன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது சாலை மறியல் செய்ய முயன்றனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தார். முடிவில் நகர செயலாளர் மேகநாதன் நன்றி கூறினார்.
ஆம்பூர்
ஆம்பூர் பைபாஸ் சாலை அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்பூர் பா.ஜ.க. நகர தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் அன்பு உள்பட 30-க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி பஸ் நிலையத்தில் மாவட்ட துணைத்தலைவர் முருகன் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.