பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்

நாகை டாட்டா நகரை சேர்ந்தவர் விஜயேந்திரன். கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்த இவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து விஜயேந்திரன் ஆதரவாளர்கள் சம்பவத்தன்று இரவு டாடா நகரில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது பட்டாசு துகள்கள் டாடா நகரில் வசிக்கும் 36-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஞானமணியின் மளிகை கடை மீது விழுந்தது. இதில் கடையில் இருந்த கண்ணாடிகள் உடைந்தன.இதுகுறித்து ஞானமணி கேட்ட போது, ஞானமணிக்கும், விஜயேந்திரன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக நாகை டவுன் போலீசார் இரு தரப்பை சேர்ந்த 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் பா.ஜ.க.வினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர். பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் பா.ஜ.க.வினரை கைது செய்த மாவட்ட போலீஸ் துறை தி.மு.க.வினரை கைது செய்யாததை கண்டித்து நாகை அவுரித்திடலில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பேசினார். இதில் திரளான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டு போலீஸ் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story