பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

கே.வி.குப்பத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேற்கு ஒன்றிய தலைவர் ஈஷா சங்கர் தலைமை தாங்கினார்.

மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கிழக்கு ஒன்றிய தலைவர் ஜெயபிரகாஷ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளராக பிரசார பிரிவு மாவட்ட தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

100 நாள் வேலை திட்டம், பாரத பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், புறம்போக்கு நிலங்களின் விற்பனை, மத்திய அரசின் நல திட்டங்கள் போன்றவற்றில் நடைபெற்று வரும் தமிழக அரசின் சீர்கேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Related Tags :
Next Story