மின்கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


மின்கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

வேலூரில் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர்

வேலூரில் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் பா.கார்த்தியாயினி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜெகன், எஸ்.எல்.பாபு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். முன்னதாக பா.ஜ.க.வினர் சத்துவாச்சாரி காந்திநகரில் உள்ள அம்பேத்கர்சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர். அப்போது அங்கிருந்த ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story