பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்
வெளிப்பாளையம்:
நாகை அவுரித்திடலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட செயலாளர் சித்ரவேல் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில துணைத்தலைவர் வேத முகுந்தன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு துணை செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பாளர் காளி விஜயபாலன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாண்டித்துரை, தலைமை நிலைய பேச்சாளர் மா.ப.சாமி. ஒன்றிய செயலாளர்கள் துரை, குணசீலன், வேலாயுதம், மணிகண்டன், நகர செயலாளர் சித்திக், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story