சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
x

சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

மணிப்பூர் கலவரத்தை கண்டுகொள்ளாத பா.ஜ.க. அரசை கண்டித்து நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு., அகில இந்திய விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய விவசாய சங்க தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

இதில் செயலாளர் சக்திவேல், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story