தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில், ஊட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஊட்டியில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் தரம் பிரித்த குப்பைகளை ஒன்றாக கொட்டுகிறது. தரம் பிரித்தபடியே கொட்ட வேண்டும். மேலும் 600 பணியாளர்கள் பணிபுரிந்த நிலையில், தற்போது ஒப்பந்த பணியாளர்கள் உள்பட 300 பேர் தான் தூய்மை பணி செய்கின்றனர். ஆட்குறைப்பு செய்த தூய்மை பணியாளர்களை மீண்டும் 600 பேராக உயர்த்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் சங்க நிர்வாகி ரவி மற்றும் நிர்வாகிகள், தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.