மோடியின் உருவ படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மோடியின் உருவ படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
களியக்காவிளை:
மோடியின் உருவ படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு கொண்டு வந்த 'அக்னிபத்' திட்டத்தை எதிர்த்து குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் குழித்துறை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் திபாகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார். இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்னிபத் திட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. மேலும், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் உருவ படத்தை எரித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் காங்கிரஸ் கட்சி மீனவர் அணி மாநில தலைவர் ஜார்ஜ் ராபின்சன், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், விளவங்கோடு பஞ்சாயத்து தலைவி லைலா ரவிசங்கர், குழித்துறை நகரத் தலைவர் அருள்ராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார், திருவட்டார் வட்டார காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ஜான் வெர்ஜின், மேல்புறம் ஒன்றிய கவுன்சிலர் ரவிசங்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.