காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை என்ற பெயரில் அமலாக்கத் துறையினர் ராகுல்காந்தியை அலைக்கழிப்பதாகவும், இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலை நாகா்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயல் தலைவர் சகாய பிரவீன், வார்த்தக காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் நரேந்திர தேவ், மாணவரணி தேசிய ஒருங்கிணைப்பாளர் அபிஜித் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story