அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்
'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை வழக்கில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இ்ந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். பொது செயலாளர் தாரை ராஜகணபதி, துணை மேயர் சாரதா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திருமுருகன், ஷேக்இமாம், மாநகர பொதுச்செயலாளர் விஜய் ஆனந்த், மண்டலக்குழு தலைவர்கள் சாந்தமூர்த்தி, கோவிந்தராஜ், நிர்வாகிகள் சிவக்குமார், கார்த்தி, கரண்சிங், தர்மலிங்கம், சீனிவாசன், நிஷார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story