காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

ஆயக்காரன்புலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்ததை கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது காவல்துறை அடக்கு முறைகளை கையாள்வதை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி தலைவர் சத்யகலா செந்தில்குமார், வட்டார பொருளாளர் ஜெகநாதன், நகர பொதுச்செயலாளர் அப்சர் உசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் வட்டார பொதுச் செயலாளர் ராகுல் நன்றி கூறினார்.


Next Story