காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்தை கைவிட கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீலகிரி
பந்தலூர்,
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அக்னிபத் திட்டத்தை கண்டித்தும் நெல்லியாளம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பந்தலூர் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நிர்வாகி சாஜி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தியை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் மத்திய அரசை கண்டித்தும், இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அக்னிபத் திட்டத்தை கைவிட கோரியும் கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கோபிநாதன், அசரப் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story