காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியை அமலாக்கத்துறை வாயிலாக அலைக்கழிப்பதை கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பாக ராணிப்பேட்டை முத்துக்கடையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அமலாக்கத்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் போக்கைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Related Tags :
Next Story