காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சூலூர் பாப்பம்பட்டி பிரிவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கோயம்புத்தூர்
கருமத்தம்பட்டி
இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்த பா.ஜ.க. அரசை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமையில் சூலூரை அடுத்த பாப்பம்பட்டி பிரிவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜீ.வி.நவீன் குமார், மாவட்ட துணைத் தலைவர் வெங்கிடுபதி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் சவுந்தர்ராஜன், வி.எம்.ரங்கசாமி, மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்பட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். அவர்கள், மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
Next Story