காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தஞ்சாவூர்

அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சை ரெயிலடியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் அக்னிபத் திட்டத்தை மத்தியஅரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் மாவட்ட துணை தலைவர்கள் ராமநாதன், லட்சுமிநாராயணன், மாநில விவசாய பிரிவு செயலாளர் மணிவண்ணன், மாநகர பொருளாளர் பழனியப்பன், மாநகராட்சி கவுன்சிலர் ஹைஜாக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல, திருவையாறை அடுத்த கண்டியூரில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் திருநாவுக்கரசு தலைமையிலும், மாவட்ட பொருளாளர் ஆர்.எம்.ராஜ், மேலத்திருப்பூந்துருத்தி நகரத் தலைவர் உஜ்வல்தீப் காடேராவ் ஆகியோர் முன்னிலையிலும் ஆா்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்ட, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டா்கள் திரளாக கலந்து கொண்டனா். முடிவில் திருவையாறு நகரத்தலைவர் பசுபதிராஜா நன்றி கூறினார்.






Next Story