காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாவூர்சத்திரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தென்காசி
பாவூர்சத்திரம்:
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி பாவூர்சத்திரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முரளிராஜா மற்றும் பலர் முன்னிலை வைத்தனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி கோரியும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்ட ராஜா உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story