சிதம்பரம் பகுதியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சிதம்பரம் பகுதியில்  மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

சிதம்பரம் பகுதியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும், ராகுல்காந்தி, சோனியா காந்தி மீது அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளை கண்டித்து நேற்று காங்கிரஸ் கட்சியினர் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குமராட்சி

அதன்படி கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் குமராட்சி கடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவருமான கே.ஐ. மணிரத்தினம் தலைமை தாங்கினார். மாநிலபொதுக்குழு உறுப்பினர் மணிமொழி, வட்டாரத் தலைவர்கள் திருவாசமூர்த்தி, பாபு ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்டுமன்னார்கோவில் நகரத் தலைவர் அன்வர் வரவேற்றார்.

இதில் மாவட்டத் துணைத் தலைவர் நஜிர் அகமது, மகிளாகாங்கிரஸ் மாவட்ட தலைவர் கரோலின் அண்ணாதுரை, மற்றும் நிர்வாகிகள் அன்பழகன், கோவிந்தராஜ், ஜோதி பாஸ், மனுநீதி செல்வன், சலாம், தம்பியா பிள்ளை, அண்ணாதுரை, இளைஞர் காங்கிரஸ் கிருபாகரன், உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசின் விலைவாசி உயர்வைகண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் லால்பேட்டை நகர தலைவர் இதாயத்துல்லா, நன்றி கூறினார்.அதேபோல் காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையத்தின் முன்பும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்

இதேபோல், சிதம்பரத்தில் தபால் நிலையம் முன்பு கடலூர் தெற்கு மாவட்டம் மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர காங்கிரஸ் தலைவர் தில்லை.ஆர்.மக்கின் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஜெமினி எம்.என். ராதா வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் ஆர்.சம்பந்த மூர்த்தி,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பி.வெங்கடேசன், மாநில ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் சிவசக்தி ராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஷாஜகான், மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் பி.பி.கே சித்தார்த்தன், முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தவர்த்தாம்பட்டு விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் நெல்சன் ஆர்.வி. சின்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பரங்கிப்பேட்டை

இதேபோல், பரங்கிப்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு வட்டாரம் கிள்ளை, பரங்கிப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி ஆகியன இணைந்து கிள்ளை கடைவீதீயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு கிள்ளை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அரங்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் கட்சி செயலாளர் கிள்ளை சசிகுமார் வரவேற்றார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் (பரங்கிப்பேட்டை தெற்கு) சுந்தர்ராஜன், (வடக்கு) ரவிச்சந்திரன், நகர தலைவர் பக்கிரிசாமி, கிள்ளை பேரூராட்சி மன்ற உறுப்பினர் மைதிலி குமார், முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை மாநில பொதுக்குழு உறுப்பினர் கிள்ளை சத்தியமூர்த்தி தொடங்கி வைத்து பேசினார். மாநில காங்கிரஸ் கமிட்டி செயலாளர் வக்கீல் ஜெயச்சந்திரன் கண்டனம் தெரிவித்து பேசினார்.

இதில் மாநில ஊடகப் பிரிவு செயலாளர் சுந்தரவேல், சாரங்கபாணி, தங்கவேல், அறிவழகன், அழகர்சாமி, அருணகிரி, தமிழ்மணி, பூராசாமி, சங்கர், அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் பக்கிரி சாமி நன்றி கூறினார்.

புவனகிரி

புவனகிரி தபால் நிலையம் முன்பு நடந்த காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், விநாயகம், செல்வராஜ், ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி தொடர்பாளர் சம்பத் வரவேற்றார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் புவனகிரி டாக்டர் செந்தில்வேலன், மாநில செயலாளர் சேரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திருவாசகம் மூர்த்தி, மாசிலாமணி, பெருமாள், ராஜசேகர், வைத்தியநாதன், பட்டுக்கடை பன்னீர்செல்வம், பாலு உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள். முடிவில் நகர வர்த்தக பிரிவு காங்கிரஸ் தலைவர் சேதுராமன் நன்றி கூறினார்.

ஸ்ரீமுஷ்ணம்ஸ்ரீமுஷ்ணத்தில் கடைவீதியில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் என்.வி.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வேங்கடகிரி முன்னிலை வகித்தார். மாவட்ட பொது செயலாளர்கள் கே.ஆர்.செல்வம், பாலையா, வட்டாரத் தலைவர்கள் வைத்தியநாதசாமி, வீரப்பன், பாஸ்கர், ஹரிக்கிருஷ்ணன், வட்டார பொருளாளர் குணசேகரன், குணமங்கலம் லட்சுமணன் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர சிறுபான்மை பிரிவு தலைவர் ஜான் பாஷா நன்றி கூறினார்.


Next Story